ETV Bharat / state

முதலையை தாக்கிய இருவருக்கு அபராதம்: ரேஞ்சர் அதிரடி

சேலம்: வன உயிரியல் பூங்காவில் இருக்கும் முதலைகளை கல்லால் தாக்கிய இருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

salem zoo
author img

By

Published : Aug 17, 2019, 8:55 PM IST

Updated : Aug 17, 2019, 11:02 PM IST

சேலம் மாவட்டம் குருவம்பட்டி அருகே உள்ள வன உயிரியல் பூங்காவில், மயில், யானை, முதலைகள் வங்காநரி போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு செயற்கை நீரூற்று, பொதுமக்களை கவரும் வகையிலான செடிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு வருகிறது.

குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா

இங்குள்ள மிருகங்களைத் துன்புறுத்தக் கூடாது, தின்பண்டங்களைத் தரக்கூடாது உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் பூங்கா முழுவதும் எழுதப்பட்டிருந்தாலும், சுற்றிப் பார்க்க வரும் சிலர், மயில் மற்றும் முதலைகளின் மீது கற்களை வீசுவதாக ரேஞ்சர் முரளிக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து ரேஞ்சர் முரளியும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களும் உயிரியல் பூங்கா முழுவதும் சுற்றிப்பார்த்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் முருகேசன், ஜெகதீஷ் ஆகியோர் வன உயிரியல் பூங்காவிற்கு சுற்றிப் பார்க்க வந்தனர். அப்போது இவர்கள் இருவரும் முதலைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று முதலைகளின் மீது கற்களை வீசினர். இதை கவனித்த வன ஊழியர்கள் இருவரையும் தனியே அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர்கள் விளையாட்டிற்காக முதலைகள் மீது கற்களை வீசியதாகவும் தெரியாமல் செய்துவிட்டோம் என்றும் தெரிவித்ததையடுத்து வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் வேலை பார்க்கும் ஹோட்டல் முதலாளிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் சிலர் அங்கு வந்து ரேஞ்சர் முரளியிடம் ரூபாய் 10,000 அபராதத்தைக் கட்டி ஹோட்டல் ஊழியர்கள் முருகேசன், ஜெகதீஷ் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

Intro:முதலையை கல்லால் தாக்கிய இருவருக்கு அபராதம். சேலம் ரேஞ்சர் முரளி அதிரடி நடவடிக்கை.

Body:சேலத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் இருக்கும் முதலைகளை கல்லால் தாக்கிய இருவருக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் அருகே உள்ள கோரிமேடு பகுதியில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மயில், மற்றும் யானை, முதலைகள் வங்காநரி போன்றவை வளர்க்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இங்கு செயற்கை நீரூற்று மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் செடிகள் வைக்கப்பட்டு வருகிறது.

பூங்கா முழுவதும் மிருகங்களை துன்புறுத்தக் கூடாது. தின்பண்டங்களை தரக்கூடாது என எழுதி வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுற்றிப் பார்க்க வரும் சிலர் மயில் மற்றும் முதலைகளின் மீது கற்களை வீசுவதாக ரேஞ்சர் முரளிக்கு தெரியவந்தது. இதனையடுத்து ரேஞ்சர் முரளியும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களும் உயிரியல் பூங்கா முழுவதும் சுற்றிப்பார்த்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சேலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் முருகேசன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் வன உயிரியல் பூங்காவிற்கு சுற்றிப் பார்க்க வந்தனர்.

அப்பொழுது இவர்கள் இருவரும் முதலைகள் இருக்கும் பகுதிக்குச் சென்று முதலைகளின் மீது கற்களை வீசினர். இதை கவனித்த வன ஊழியர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துக் கொண்டனர்.

பிறகு இவர்கள் இருவரிடமும் விசாரித்த பொழுது விளையாட்டிற்காக முதலைகள் மீது கற்களை வீசியதாகவும் தெரியாமல் செய்து விட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இவர்களிடம் விசாரித்த ரேஞ்சர் முரளி வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விலங்குகளை துன்புறுத்திய குற்றத்திற்காக இருவருக்கும் தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் கட்ட உத்தரவிட்டார். அபராதம் கட்டவில்லை என்றால் ஆறு மாதம் சிறை செல்ல நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் வேலை பார்க்கும் ஹோட்டல் முதலாளிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் சிலர் அங்கு வந்து ரேஞ்சர் முரளியிடம் ரூபாய் 10,000 அபராதத்தை கட்டி ஹோட்டல் ஊழியர்கள் முருகேசன், ஜெகதீஷ் இருவரையும் அழைத்துச் சென்றனர்.

Conclusion:
Last Updated : Aug 17, 2019, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.