ETV Bharat / state

சேலத்தில் வெள்ளைக்கல் கடத்தலால் விபரீதம்.. செக்போஸ்ட்டில் மோதி ஒருவர் உயிரிழப்பு.. - white stone smuggling

சேலம் மாவட்டம் டால்மியா போர்டு பகுதியில் வெள்ளைக்கல் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டில் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tragedy due to white stone smuggling in Salem! Innocent person killed!
சேலத்தில் வெள்ளைக்கல் கடத்தலால் விபரீதம்! அப்பாவி நபர் உயிரிழப்பு!
author img

By

Published : Apr 1, 2023, 3:52 PM IST

சேலம்: சூரமங்கலம் அடுத்த டால்மியா போர்டு பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான வெள்ளைக்கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கம் கடந்த 13 ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், சுரங்கத்தில் இருந்து வெள்ளைக் கல்லை திருட்டுத்தனமாக வெட்டி லாரிகளில் கடத்தும் சமூக விரோதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுத்து, வெள்ளைக்கல் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்த டால்மியா போர்டு பகுதியில் செக்போஸ்ட் அமைத்தனர்.

இதனால், கடந்த சில மாதங்களாக கடத்தல் சம்பவம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், சென்ற சில வாரங்களாக கடத்தல் கும்பல் மீண்டும் தங்களது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விட்டது. பகல் இரவு என்று பாராமல் 24 மணி நேரமும் தினக் கூலிக்கு ஆட்களை அமர்த்தி வெள்ளைக்கல் சுரங்கத்தில் கற்களை வெட்டி மூட்டைகளாக கட்டி, லாரிகளில் கடத்தல் கும்பல் எடுத்துச் சென்றது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் டால்மியா போர்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், நேற்று மதியம் வெள்ளைக்கல் சுரங்கப் பகுதிக்கு வந்த தாசில்தார் கள ஆய்வு மேற்கொண்டு, பல நூறு டன் வெள்ளை கற்கள் மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்தார் .

இதனையடுத்து அவற்றை கைப்பற்றி 'டேன் மேக்' நிறுவனத்திற்கு அனுப்பிட தாசில்தார் அருள் பிரகாஷ் நடவடிக்கை மேற்கொண்டார். உடனடியாக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரி கொண்டு வரப்பட்டு அவற்றின் மூலம் சுமார் 40 டன் அளவிலான வெள்ளைக் கல் மட்டுமே நேற்று மாலை வரை டேன் மேக் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மீதமுள்ள வெள்ளை கற்களை இன்று எடுக்கலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் இருந்த நிலையில், இதனை பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் வெள்ளைக் கல் மூட்டைகளை அள்ளிச் சென்றனர்.

அப்போது, லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் காயம் அடைந்தும் உள்ளார். ஆனால், கவிழ்ந்த லாரியை கடத்தல் கும்பல் கிரேன் வைத்து தூக்கி மீட்டது. கடத்தல் நடக்காது என்ற நம்பிக்கையில் செக் போஸ்ட் திறந்தே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இரவு நேரத்தில் கடத்தல் நடப்பதை அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் செக்போஸ்ட்டை மூடி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வெள்ளக்கல் பட்டி கிராமம் தாழம்பூ ஓடை பகுதியைச் சேர்ந்த, டிராக்டர் ஓட்டும் தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி( 52) என்பவர் வழக்கம் போல், இன்று(மார்ச் 1) அதிகாலை 5 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு டால்மியா போர்டு சென்றுள்ளார். அப்போது, வழியில் செக் போஸ்ட் மூடப்பட்டு இருந்துள்ளது. அதை கவனிக்காமல் அதன் மீது வேகமாக மோதி தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த அடி பட்டு ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரமூர்த்தி மயங்கி விழுந்தார்.

அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஆம்புலன்சை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்‌ . இதனையடுத்து, அவரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் மற்றும் விபத்து சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“கடந்த ஆண்டு சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்த டால்மியா போர்டு பகுதியில், ஐந்து இருசக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வெள்ளைக்கல் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் மீது சந்தேகம் உள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், தற்போது வாகன எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் நேற்று இந்த வெள்ளைக்கல் கடத்தலில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதே பகுதியில் தாழம்பூ ஓடை, பாம்பு காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பெருமாள், மாரியப்பன், செல்வகுமார், ரமேஷ், தங்கவேல், ஒத்த வேல் ஆகியோர் மாவுக்கல் அரைக்கும் ஆலை வைத்துள்ளனர். அதனால் அவர்கள் எளிதாக வெள்ளை கல்லை கடத்திச் சென்று, அரைத்து உர தயாரிப்புக்காக அனுப்பி வைக்கின்றனர். அவர்களை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையும் வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், இது போன்ற அப்பாவிகள் மரணம் அடைவது தடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

வெள்ளைக்கல் கடத்தலால், அப்பாவி ஒருவரின் உயிர் பலியாகி உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த சேலம் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் அதிரடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.