ETV Bharat / state

''அபராதம் வாங்கவில்லை'' சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி! - போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோசடி

சேலம்: ஸ்பாட் பைன் பணத்தை வாங்கிவிட்டு வாங்கவில்லை என போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோசடி செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

traffic-police-issue-in-salem
traffic-police-issue-in-salem
author img

By

Published : Dec 12, 2019, 4:08 PM IST

சேலம் மாநகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பாட்ஃபைன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம் விதித்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மாநகரில் தினமும் போக்குவரத்து விதிகளை மீறும் ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் சுந்தர் லாட்ஜ் பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அபராதம் வசூலிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. இந்த வீடியோவில் சேலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் 200 ரூபாய் அபராதம் விதித்துவிட்டு அதற்கான சலானில் பணம் வாங்கவில்லை என ரசீது கொடுக்கும் காட்சியும், அதனை ஒருவர் கண்காணித்து, பணத்தை வாங்கிக் கொண்டு, பணம் வாங்கவில்லை என ரசீது கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பும் காட்சியும் வைரலாக பரவி வருகிறது.

சமூகவலைதளங்களில் பரவும் போக்குவரத்து ஆய்வாளரின் மோசடி

அதற்கு முறையாக பதில் அளிக்காத அந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் அங்கே இருந்து செல்கிறார். இந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதன் அடிப்படையில் முறைகேடு புகாரில் சிக்கிய எஸ் ஐ கோவிந்தராஜ் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் மாநகர துணை கமிஷனர் செந்தில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட்ஃபைன் விதித்து அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டதும், ஆனால் அவர்கள் பணம் செலுத்தவில்லை என்று ரசீது வழங்கியதும் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கோவிந்தராஜை சஸ்பெண்ட் செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..! வருவாய் துறை ஆய்வாளர் சஸ்பெண்ட்

Intro:சேலத்தில் ஸ்பாட் பைன் பணத்தை வாங்கிவிட்டு வாங்கவில்லை என போக்குவரத்து உதவி ஆய்வாளர் மோசடி செய்யும் சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது........
Body:
சேலம் மாநகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பாட் பைன் திட்டம் அமல்படுத்தப்பட்டது ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடியாக அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி செய்த மாநகரில் தினமும் போக்குவரத்து விதிகளை மீறும் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் சுந்தர் லாட்ஜ் பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சேலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் 200 ரூபாய் அபராதம் விதித்து விட்டு அதற்கான சலானில் பணம் வாங்கவில்லை என ரசீது கொடுக்கும் காட்சியும், அதனை ஒருவர் கண்காணித்து, பணத்தை வாங்கிக் கொண்டு, பணம் வாங்கவில்லை என ரசீது கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பும் காட்சியும் வைரலாக பரவி வருகிறது. அதற்கு முறையாக பதில் அளிக்காத அந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் அங்கே இருந்து செல்கிறார். இந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதன் அடிப்படையில் முறைகேடு புகாரில் சிக்கிய எஸ் ஐ கோவிந்தராஜ் மாநகர ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் பேரில் மாநகர துணை கமிஷனர் செந்தில் விசாரணை மேற்கொண்டார்.அதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் வாகன ஓட்டிகளிடம் ஸ்பாட் பைன் விதித்து அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டதும் ஆனால் அவர்களுக்கு பணம் செலுத்தவில்லை என்று ரசீது வழங்கியதும் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கோவிந்தராஜ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.