உலகப் புகழ்பெற்ற பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அண்மையில் சுற்றுலாப் பயணிகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்குக் குவிந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைப்பிடிப்பது இல்லை என புகார்கள் எழுந்தன. இதனால் மீண்டும் ஏற்காட்டில் கரோனா தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்குச் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பிற நாள்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.ப் ஏற்காட்டில் வசிக்கும் உள்ளூர் மக்கள் போக்குவரத்தின் போது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணங்களைக் காட்டி பயணிக்கலாம்.
இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை