ETV Bharat / state

கார் நேருக்கு நேர் மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு

சேலம்: ஆத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

three died in accident near attur
three died in accident near attur
author img

By

Published : Jun 3, 2020, 11:03 PM IST

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனது மனைவி வரலட்சுமி, அவரது உறவினர் சாந்தி ஆகிய மூன்று பேரும், தங்களது இல்லத்திருமண நிகழ்ச்சிக்காக தம்மம்பட்டியில் இருந்து நகை வாங்கிக்கொண்டு கீரிப்பட்டி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சேலத்திலிருந்து தம்மம்பட்டி வழியாக திருச்சி சென்ற சொகுசு கார், கீழ் கணவாய் என்ற இடத்தில், சிவகுமார் ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கீரிப்பட்டியைச் சேர்ந்த சிவகுமார், அவருடைய மனைவி வரலட்சுமி அவருடைய உறவினர் சாந்தி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் சேலத்தில் இருந்து காரில் வந்த ஏழு பேரில், மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லியகரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றி உடற் கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து மல்லியகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்திற்காக நகை வாங்க சென்றவர்கள், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.