ETV Bharat / state

'மின் கட்டணத்தில் குழப்பம் இல்லை'- அமைச்சர் செந்தில் பாலாஜி - electricity bill

சேலம்: மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் இருந்தால் பொதுமக்கள் மின் வாரியம் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் .

'மின் கட்டணத்தில் குழப்பம் இல்லை'- அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : May 25, 2021, 11:05 PM IST

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (மே.25) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதம சிகாமணி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் வடக்கு சட்டபேரவை உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் தங்களுக்கான கட்டணத்தை மட்டும் கட்டினால் போதுமானது. கூடுதலாக மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தங்களுடைய மின்சார ரீடிங் அளவீடு எவ்வளவு என்பதை மக்கள் புகைப்படம் எடுத்து வைத்து கொள்ளலாம். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. மின் கட்டணம் தொடர்பாக குளறுபடிகள் இருந்ததால் வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் " என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கூடியவிரைவில் செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படும்' - அமைச்சர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.