ETV Bharat / state

சேலம் அருகே நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு - inscriptions and Navakanda sculptures founds in salem

சேலம் அருகே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் நவகண்ட சிற்பங்கள் குறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

The Salem Historical Research Center is conducting research on the inscriptions and Navakanda sculptures

author img

By

Published : Jan 10, 2021, 11:09 AM IST

Updated : Jan 10, 2021, 11:20 AM IST

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில், 16ஆம் நூற்றாண்டின் சிவன் கோயிலில் கல்வெட்டுகளும், நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெங்கடேசன் கூறுகையில்," சேலம் கெங்கவல்லி அருகே உள்ள உலிபுரம் பகுதியில் சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஆய்வுகள் நடத்தினோம். அப்போது, சுவேதா நதியின் தென்கரையில், 16 ஆம் நூற்றாண்டின் சிவன் கோயில் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டன. இதுகுறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோயிலில் இரு வகையான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று முழுமையான கல்வெட்டாகவும், மற்றொன்று துண்டு கல்வெட்டாகவும் காணப்பட்டது. இது 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

துண்டு கல்வெட்டு

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன், பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டு ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் எனத் தொடங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. அது இந்தக் கோயிலை அம்பலத்தாடி நாயனார் கோயில் எனக் குறிக்கிறது.

The Salem Historical Research Center is conducting research on the inscriptions and Navakanda sculptures
சூரியன், பிறை. சூலத்துடன் கல்வெட்டு

16ஆம் நூற்றாண்டில் ஆரகலூரை தலைநகராக கொண்டு நாயக்கர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக , உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர் என்பவர் இருந்துள்ளார்.

இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர் இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முழுமையான கல்வெட்டு

இரண்டாவது கல்வெட்டு கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளுடன் உள்ளது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் என்பவர் அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார்.

முழு கல்வெட்டு

அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோயில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு தன்மமாக செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்கு உள்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும், திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்தத் தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள்.

இந்தத் தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

நவகண்டம்

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னயே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும்.

போர் நடக்கும் முன் கொற்றவை கோயிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும். இந்த வீரர்களுக்கு உதிரப்படியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்

உலிபுரம் நவகண்ட நடுகல்

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம்.

பல்லவர்கள், சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர், ஊர், எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

மூன்று அடி உயரம், நேரான கொண்டை, கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது.

ஒரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும். இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர்

அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 900 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை புதுக்கோட்டையில் கண்டுபிடிப்பு!

Last Updated : Jan 10, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.