பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் கடைபிடிக்கப்படுவதால் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து வந்தனர். இதனால் கடந்த 4 வாரங்களாக பெரும்பாலான இறைச்சிக் கடைகள், விற்பனை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், புரட்டாசி மாதம் முடிவடைந்து நேற்று (அக்.17) ஐப்பசி மாசம் தொடங்கியது. இதனால் சேலம் பழைய பேருந்து நிலையம் கறி மார்க்கெட் பகுதி, அன்னதானப்பட்டி, குகை, நெத்திமேடு, அம்மாபேட்டை, அயோத்தியா பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் பரஸ்பரம் முண்டியடித்துக்கொண்டு இறைச்சி வாங்கிச் சென்றனர்.
அதுபோல, திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இங்கு போதுமான பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை இல்லாததால், நோய் பரவும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் இங்கு அனைத்து வகையான மீன்களும் கிலோ 100 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ’மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்குக’ - அன்புமணி ராமதாஸ்