ETV Bharat / state

ஏரிகள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

சேலம்: 5 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டார்.

salem collector visit lack cleaning
author img

By

Published : Jul 31, 2019, 10:24 PM IST

சேலம் மாவட்டத்தில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் பங்களிப்புடன் தீவிரமாக நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி 10 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மன்னார்பாளையம் அருகிலுள்ள திருமணிமுத்தாறு தொடக்கப் பகுதியில் நடந்து வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது திரளான விவசாயிகள் அங்கு வந்து குடி மராமத்து பணிக்கு பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ராமன் விவசாயிகளுடன் திருமணிமுத்தாற்றில் நடந்துசென்று முட்செடிகள் அகற்றப்பட்டு உள்ளதையும் மண் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

ஏரிகள் தூர்வாரும் பணி

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது "ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பில் 20 ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடந்துவருகிறது. இப்பணிகளை அப்பகுதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் இணைந்து செய்துவருகிறோம். பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 15க்குள் முடிவடைந்துவிடும். இதன் மூலம் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை ஏரிகளில் தேக்கி அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். மேட்டூர் அணையில் மணல் திருடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது "என்றார்.

Intro:மேட்டூர் அணையில் வண்டல் மண் திருடுபவர்கள் கண்காணிக்க உத்தரவு சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தகவல்.

Body:சேலத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் பார்வையிட்டார்.

சேலம் மாவட்டத்தில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது இதில் 10 சதவீத விவசாயிகள் பங்கு ஆகும். மீதி 90% தமிழக அரசின் உடையது.

இந்த திட்டத்தின் கீழ் 20 ஏரிகள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மன்னார் பாளையம் அருகிலுள்ள திருமணிமுத்தாறு தொடக்கப் பகுதியில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது திரளான விவசாயிகள் அங்கு வந்து குடி மராமத்து பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் விவசாயிகளுடன் திரு மணிமுத்தாற்றில் நடந்து சென்று முட்செடிகள் அகற்றப்பட்டு உள்ளதையும் மண் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது 20 ஏரிகள் ரூபாய் 5 கோடியே 63 லட்சம் மதிப்பில் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்து விடும்.

மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுப்பவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மண் திருடு போவதை தடுக்கவும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.