ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; ஆசிரியர் போக்சோவில் கைது! - போக்சோ

சேலம்: அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவி
author img

By

Published : Jul 8, 2019, 11:48 PM IST

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசுப் பள்ளியில் படித்தவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பாலாஜி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாலாஜி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

இந்த நிலையில் ஆசிரியர் பாலாஜியை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டன.

சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசுப் பள்ளியில் படித்தவரும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அப்பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பாலாஜி என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாலாஜி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

இந்த நிலையில் ஆசிரியர் பாலாஜியை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டன.

Intro:சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவியை ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.Body:

இந்த நிலையில் ஆசிரியரின் ஒழுங்கீன செயலை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் அரசு பள்ளி முன்பு இன்று போராட்டங்கள் நடத்தவுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த வேம்படிதாளம் அரசுப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த உதவி தலைமையாசிரியர் பாலாஜி என்பவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .

இதனால் கர்ப்பம் தரித்த அந்த மாணவி விஷயத்தை தனது வகுப்பு மாணவிகளிடம் தகவல் தெரிவித்து அழுதிருக்கிறார்.

மற்ற மாணவிகள் மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மாணவி கர்ப்பமான தகவல் பரவியதால் பள்ளியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதனை அடுத்து வேம்படிதாளம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் புஷ்பராணி, பள்ளி மற்றும் ஆசிரியர் பாலாஜியிடம் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலாஜி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தார் .

இந்த நிலையில் ஆசிரியர் பாலாஜி தலைமறைவானார் பின்னர் அவரை பிடிக்க ஆய்வாளர் புஷ்பராணி தனிப்படை அமைத்து பாலாஜியை கோவையில் கைது செய்தார்.

அதனை அடுத்து சேலம் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் பாலாஜி விசாரணை நடத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .

இந்த நிலையில் இன்று மாணவியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர் பாலாஜியை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் பள்ளி முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதனை அறிந்த போலீசார் பாதுகாப்புக்காக பள்ளிவாயில் முன்பு 100 க்கும் மேற்பட்டோர்குவிந்தனர் .

இந்த நிலையில் இன்று காலை ஐயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகன் மற்றும் மகளை இருசக்கர வாகனத்தில் வேம்படிதாளம் அரசுப் பள்ளிக்கு அழைத்து வந்தார் .

இருவரையும் பள்ளியில் விட்ட பிறகு பள்ளி அருகே உள்ள கடை முன்பு நின்று கொண்டு தனது நண்பர் ஒருவரிடம் செல்வராஜ் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் , செல்வராஜிடம் இங்கு நின்று பேசாதீர்கள் என்று மிரட்டியிருக்கிறார் .

இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து போலீசார் செல்வராஜை வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளி அடித்து உதைத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியிருக்கிறார் .

இதனை அறிந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி பள்ளி முன்பு திரண்டனர் .

இதனையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர் .

மேலும் பல மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை அமுதாவிடம் சென்று எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் படிக்க வைக்க போகிறோம் அதனால் மாணவிகளின் மாற்றுச் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு தலைமை ஆசிரியை மறுத்துவிட்ட நிலையில் பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் திரண்டு நின்று தலைமை ஆசிரியையின் செயலை கண்டித்து முழக்கமிட்டனர் .

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் புஷ்பராணி பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் .Conclusion:இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.