ETV Bharat / state

இந்தி மொழியை எதிர்த்தது திராவிடத் தலைவர்களின் தவறு! - எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

சேலம்: இந்தி மொழியை எதிர்த்ததன் மூலம் திராவிடத் தலைவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் தெரிவித்துள்ளார்.

tamilvanan
author img

By

Published : Jul 31, 2019, 3:17 PM IST

சேலம் தனியார் கல்லூரி ஒன்றில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”கல்லூரி வாழ்க்கை முற்றிலும் வேறு வகையானது. இங்குதான் கலை, விளையாட்டு என எல்லா திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளமுடியும். மத்திய அரசு புதியதாக கொண்டுவந்துள்ள கல்வி கொள்கை குறித்தும் முழுமையாக விமர்சிக்க இயலாது. ஏனெனில் நான் கல்வியாளர் இல்லை.

அதே நேரத்தில் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன். இந்தி படித்து தான் ஆக வேண்டும் என்று திணிக்கக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக தான் தந்துள்ளார்கள். மேலும் இந்தி மொழியை எதிர்த்தது திராவிடத் தலைவர்கள் செய்த தவறு. இந்தியை கற்றுக் கொள்வதில் தவறில்லை.

சேலம்
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

மேலும் மாநிலளவில் தமிழ் வழியில் கற்ற மாணவர்கள் முதல் இடங்களை பெற்ற நிலையிலும், கல்லூரி பருவத்தில் ஆங்கிலவழி பாடங்களை படிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே தமிழையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாக வைத்துப் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அவ்வாறு செய்தால் மட்டுமே வளமான எதிர்காலத்தைப் பெற முடியும்" என்றார்.

Intro:இந்தி மொழியை எதிர்த்ததன் மூலம் திராவிட தலைவர்கள் மாபெரும் தவறு செய்துவிட்டார்கள் என்று எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப் படிப்பில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் தமிழ் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," கல்லூரி வாழ்க்கை முற்றிலும் வேறு வகையானது. இங்குதான் கலை விளையாட்டு என எல்லா திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும். வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பருவம் கல்லூரி காலம் தான். மத்திய அரசு புதியதாக கொண்டுவந்துள்ள கல்வி கொள்கை குறித்தும் முழுமையாக விமர்சிக்க இயலாது. ஏனெனில் நான் கல்வியாளர் இல்லை. அதே நேரத்தில் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன் . இந்தி படித்து தான் ஆக வேண்டும் என்று திணிக்கக்கூடாது. அதை ஒரு வாய்ப்பாக தான் தந்துள்ளார்கள். மேலும் இந்தி மொழியை எதிர்த்தது திராவிடத் தலைவர்கள் செய்த தவறு. இன்று வளைகுடா நாடுகளில் மலையாளிகள் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதற்கு இந்தி மொழிதான் காரணம் . தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கூட வட இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதற்குக் காரணம் இந்தி மொழியை அவர்கள் கற்றதுதான். அதனால் இந்தியை கற்று கொள்வதில் தவறில்லை" என்றார்.

Conclusion:மேலும் லேனா தமிழ்வாணன் கூறும்போது "மாநில அளவில் தமிழில் கற்ற மாணவர்கள் முதல் இடங்களை பெற்ற நிலையிலும், கல்லூரி பருவத்தில் ஆங்கில வழி பாடங்களை படிப்பதில் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். எனவே தமிழையும் ஆங்கிலத்தையும் இரு கண்களாக வைத்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் அவ்வாறு செய்தால் மட்டுமே வளமான எதிர்காலத்தை பெற முடியும் "என்றும் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.