சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்கு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில பரப்புரைச் செயலாளர் சுகமதி கூறுகையில்,"கடந்த 17 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவன நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் 8 மண்டலங்களிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களின் கடைகளில் வேறு மாவட்ட அதிகாரிகள் வேறு கடைகளின் மேலாளர்கள் ஆய்வு செய்வதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மேலும் அவர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.
எனவே, உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரப் படுத்துவது, அடிப்படை ஊதியம் ரூ. 21 ஆயிரமாக உயர்த்துவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி டாஸ்மாக் பணியாளர்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : ரேஷன் பொருள்கள் வழங்காதாதை தெரிவித்தால் நடவடிக்கை!