ETV Bharat / state

திமுக ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்சம் - லாரி உரிமையாளர்கள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு - போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் அறிவித்த வாக்குறுதிகள், கானல் நீராக போய்விட்டது, போக்குவரத்து துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகன் வெங்கடாஜலம் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

லாரி உரிமையாளர்கள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

author img

By

Published : Mar 23, 2022, 10:45 PM IST

சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மூன்றாவது வருடாந்திர கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முருகன் வெங்கடாஜலம், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அமைச்சரை மாற்ற வேண்டும்: ஒரு குண்டூசியை நகற்றி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தேர்தல் காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் போக்குவரத்துத்துறை சீரமைக்கப்படும் என்றார். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

லாரி உரிமையாளர்கள் சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆனால், தற்பொழுது ஆட்சிக்கு வந்து பலமாதங்கள் ஆகிறது. வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் மட்டும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. வருகின்ற மே மாதத்திற்குள் இதனை சீர்படுத்தி எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் மாவட்டந்தோறும் தெருக்கள்தோறும் பல்வேறு தொடர் போராட்டம் நடத்தப்படும். அடுத்தகட்டமாக கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

மேலும் அவர், ’’தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் அவர்களை உடனடியாக மாற்ற வேண்டும். அந்த துறையில் உள்ள ஊழல்வாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதையும் படிங்க: தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.