ETV Bharat / state

உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் கே.பி. அன்பழகன் - பெரியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா

சேலம்: உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

KP Anbalagan
author img

By

Published : Oct 24, 2019, 11:10 PM IST

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 19ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு 55 ஆயிரத்து 784 மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.

இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "பெரியார் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வி படிக்கும் 18 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ள மாணவ மாணவியர் எண்ணிக்கையில் இந்தியா 26.3 விழுக்காடு பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளில் 49 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில் உள்ளனர்" என்றார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் 19ஆவது பட்டமளிப்பு விழா

பின்னர் பேசிய முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம், "மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதனால், பொருளாதாரம், மனித ஆற்றலை முன்னெடுப்பது சாதகமாக உள்ளது.

அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட்ட இளம் தலைமுறையினர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றிவருவது நம் தேசத்திற்குப் பெருமை" என்றார்.

Intro:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்
19 ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார்.Body:

இந்த விழாவில் 55ஆயிரத்து 784 பேருக்கு பட்டங்களும்,பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்ற 95 பேருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டங்களையும் வழங்கி கௌரவித்தார்.........

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது என்று முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம் உரை......

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் 19 ஆவது பட்டமளிப்பு விழா இன்று காலை நடந்தது. இவ்விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 55 ஆயிரத்து 784 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியது,பெரியார் பல்கலை கழகத்தின் மேம்பாட்டிற்காக 23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் உயர்கல்வி படிக்கும் 18 வயதிலிருந்து 23 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் எண்ணிக்கையில் இந்தியா 26.3 சதவீதம் பெற்றுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையில் இந்தியளவில் 49 சதவீதம்பெற்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார்.

இதை தொடர்ந்து முன்னாள் கேரளா ஆளுநர் சதாசிவம் உரையாற்றினார். அவர் பேசியது, மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. என்றும் இந்தியா பொருளாதாரம் மற்றும் மனித ஆற்றலை முன்னெடுப்பது சாதகமானது என்றார்.மேலும் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் பயிற்றுவிக்கப்பட்ட இளம் தலைமுறையினர் விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றி வருவது நம் தேசத்திற்கு பெருமை.இவர்களின் மதிநுட்பம் மிக்க செயல்பாடுகள் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதை பார்க்க முடிகிறது என்று கூறினார்.

இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் , மற்றும் சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.