தமிழ்நாடு மின்சார வாரிய உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் வேலைக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படவுள்ளது. சேலம் மின் பகிர்மான வட்டத்திலுள்ள 2,871 பேருக்கு அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதி தேர்வு, உடையாப்பட்டி பகுதியிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.
இதில், மின்கம்பம் ஏறுதல், கிராஸ் கம்பிகளை இணைத்தல், எடையுடன் 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவை நடந்தன. பின்னர் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பு தருவது எப்படி எனத் தேர்வு வைக்கப்பட்டது. வருகிற 13ஆம் தேதி வரை இந்த உடல்தகுதி தேர்வு நடக்க இருக்கிறது.
இந்த தேர்வுக்கு வர விருப்பமுள்ளவர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் கலந்து கொள்ளுமாறு அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.
1.போட்டோ அடையாள அட்டை
2 மாற்றுச் சான்றிதழ் அல்லது கடைசியாகப் படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பதிவுத் தாள்
3.மதிப்பெண் பட்டியல் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி இதில் ஏதாவது ஒன்று
4.சாதி சான்றிதழ் (BCO/BCM/MBC/DNC/SC/SCA/ST - பிரிவினர்களுக்கு மட்டும்)
5. மாற்றுத்திறனாளி சான்று, முன்னுரிமை வகுப்பு(priority group) பதிவு செய்திருந்தால் மட்டும்
6.பண்பு மற்றும் ஒழுக்கச் சான்று(character & conduct) இரண்டு கடைசியாகப் பயின்ற கல்விக் கூடத்திலிருந்து பெறப்பட்ட சான்று ஒன்று, மற்றும் விண்ணப்பதாரரை தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலகத்திலிருந்து 01.11.2019 இக்கு பிறகு பெறப்பட்ட சான்று ஒன்று
7.வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (பதிவு செய்திருந்தால் மட்டும்)... மேற்கண்ட சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகலுடன், அசல் சான்றையும், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் சம்பந்தப்பட்ட உடற்தகுதி தேர்வு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.