ETV Bharat / state

பணம் இரட்டிப்பு மோசடி செய்த தம்பதி கைது - சேலத்தில் பரபரப்பு - Salam latest news

சேலம்: வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி உரிமம் பெற்றுத் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாகி தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Oct 19, 2019, 6:17 AM IST

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்எம்வி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும், ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்ய உள்ளூர், வெளிநாடுகளில் ஏற்றுமதி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பியை சுற்றுவட்டார மக்கள், வியாபாரிகள் கோடிக்கணக்கில் அவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

ஆனால் மணிவண்ணன் வாக்குறுதி அளித்தப்படி எந்த உரிமையும் பெற்றுத் தராதால் விரக்தியடைந்த சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்தாண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை மேற்கொண்டனர். அதில் மணிவண்ணன் பல கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக சகோதரர்களான ராம், லட்சுமணன், மாமனார், மாமியார் சரஸ்வதி ஆகியோர் இருந்தது தெரியவந்தது.

மோசடி செய்த பணம்
மோசடி செய்த பணம்

இதையடுத்து மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை நேற்று கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து இரண்டு லேப்டாப், 2 டேப்லேட், 13செல்போன்கள், 2 சொகுசு கார், 10 பவுன் தங்கச்செயின், 2 தங்க வளையல்கள் , 50ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் தொடர் விசாரணையில், மணிவண்ணனால் இதுவரை 350பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 3 கோடியே 53 லட்சம் ரூபாய் இழந்துள்ளார். இதேபோல் பலர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதும், இந்த மோசடி பணத்தை வைத்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்ற மணிவண்ணன் பல பெண்களுடன் உல்லாசம் அனுவபவித்ததும் தெரியவந்துளளது.

இதையும ் படிங்க:நெல்லைத் தம்பதியினரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இருவர் கைது!

Intro:

வெளிநாடுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஏஜென்சி பெற்றுத் தருவதாகவும் இரட்டிப்பாக பணம் தருவதாகவும் கூறி கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட மனைவி உடன் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.Body:

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கேப்டன் பெட்ரோல் பங்க் அருகே உள்ள கிரீன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கிவரும் ஆர் எம் வி குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் மணிவண்ணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகவும் மேலும் அவர் நடத்திவரும் ஊறுகாய் மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை தயாரித்து பகுதி வழியாக வினியோக உரிமை தருவதாகவும் மேலும் அது பணம் செலுத்தினால் வெளிநாட்டிற்கு மேல் உள்ள பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வினியோக உரிமை தருவதாகவும் அவ்வாறு செலுத்தும் பணத்துக்கு லாபமும் 10 சதவிகிதம் ஊக்கத்தொகையும் தருவதாகவும் கூறி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோரை கவர்ந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று உள்ளார்.

இது சம்பந்தமாக இவரிடம் முதலீடு செய்து ஏமாந்த சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு போலீசார் இன்று மணிகண்டன் அவரது மனைவி இந்துமதி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனின் மோசடிக் செயல்களுக்கு அவரின் சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன் மாமனார் மாமியார் சரஸ்வதி அவரது அலுவலக ஊழியர்கள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது .

மணிவண்ணன் மற்றும் அவரின் மனைவி ஆகியோரிடமிருந்து இரண்டு லேப்டாப், 2 tab , 13 செல்போன்கள் 2 சொகுசு கார்கள் 10 பவுன் எடையுள்ள ஒரு தங்கச் செயின், 2 தங்க வளையல்கள் , 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

மணிகண்டனால் இதுவரை 350 பேர் பாதிப்படைந்துள்ளனர் . இவர்கள் அனைவரும் மணிவண்ணனிடம் பல கோடி ரூபாயை இழந்து, சொத்து சுகங்களை இழந்து நடுத்தெருவில் நிற்பவர்கள்.

சேலம் குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் அரிசி கடை வைத்து தொழில் செய்து வருகிறார் அவரை மூளைச்சலவை செய்து மணிகண்டன் அவரிடம் இருந்து 3 கோடியே 53 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார் கார்த்திகேயன் கொடுத்த பணத்தை இரட்டிப்பாக்கி தராமல் காலம் தாழ்த்தி வருகிறீர்கள் என்று மணிகண்டனிடம் கேட்டபோது கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார் இதன் பெயரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சீலநாயக்கன்பட்டி சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் என்பவர் 2 கோடியே 82 லட்சம் ரூபாயை மணிவண்ணனிடம் கொடுத்துள்ளார் .

அங்கம்மாள் காலனி பெண் ஒருவர் 63 லட்சம் ரூபாயை வெளிநாட்டில் ஏஜென்சி பெற்று தருவதாக கூறிய மணிவண்ணனிடம் கொடுத்து ஏமாந்து உள்ளார்.

விசாரணையில் தெரியவந்துள்ளது அவர்களிடமிருந்து மோசடி செய்த பணத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு உல்லாசப் பயணம் சென்று மணிவண்ணன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது இவை அனைத்தையும் விசாரணையில் வெளிக்கொண்டுவந்த அன்னதானப்பட்டி போலீசாருக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Conclusion:
மேலும் போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.