தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான இளங்கோவன் இல்ல திருமண விழா, ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று(நவ.27) காலை நடைபெற்றது.
இந்த, திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்துகொண்டு மணமக்கள் பிரவின்குமார் - மோனிகா இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் , செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வுக்கு பின்னர் ஆத்தூரில் இருந்து சென்னைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க: நிவர் புயலால் ரூ.400 கோடி சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு!