சேலம்: தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் மற்றும் 96 ஆவது மாநில மத்திய செயற்குழு கூட்டம் சேலம் தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்வ பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் இருந்து கூட்டுறவு தணிக்கை துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறையில் உள்ள 50 விழுக்காட்டிற்கும் மேலான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மாநில அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து மாநில தலைவர் செல்வபாண்டியன் கூறுகையில், “அரசு எங்களின் கோரிக்கைகளை அழைத்து பேசி தீர்வு காணாவிட்டால் விரைவில் தலைமை செயலகம் முன்பும், இயக்குநர் அலுவலகம் முன்பும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: Rafale watch கட்டுனது குத்தமா.? ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி