ETV Bharat / state

தமிழ் இலக்கணத்தை இனி யூடியூபில் கற்கலாம்! - tamil grammar videos

சேலம்: தமிழ் இலக்கண வேற்றுமை உருபுகளின் பயிற்சி வகுப்புகள் யூடியூபில் இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கணத்தை இனி யூடியூபில் கற்கலாம்!

author img

By

Published : Dec 28, 2020, 9:50 PM IST

சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக தமிழ் இலக்கண வேற்றுமை உருபுகளை காணொலி மூலமாக கற்றுக்கொள்ளும் பயிற்சி வகுப்புகள் யூடியுபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டு விழாவில் முதல்வர் மு. செல்வம் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

இந்தப் பயிற்சி துறை மூலமாக தமிழ் இலக்கணத்தின் அனைத்து பாடங்களுக்கான குறிப்புகளும் காணொலி பாடமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை துறையின் விரிவுரையாளர் மூ.ஜெயமணி கண்காணித்தார். இது தொடர்பான பணிகளை இத்துறையின் தலைவர் பெ.கோவிந்தபிரகாஷ் ஒருங்கிணைத்தார்.

மின் சான்றிதழ்

தமிழ் இலக்கணத்திலிருந்து பத்து வினாக்கள் கூகுளில் இணைக்கப்பட்ட படிவத்தில் இருக்கும். இந்தப் பத்து வினாக்களில் 60 விழுக்காடு சரியான விடை அளித்தவர்களுக்கு இந்நிறுவனத்தின் சார்பாக மின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:கற்பித்தலில் புதுமை: பிரதமர் மோடி பாராட்டிய தமிழாசிரியர் ஹேமலதா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.