ETV Bharat / state

'மார்வாடி' கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் அறிவிப்பு! - Marwari shops issue

சேலம்: தமிழ்நாட்டில் உள்ள மார்வாடி கடைகளை இழுத்து மூடி, பூட்டுப் போடும் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் தமிழ் நேசன் தெரிவித்துள்ளார்.

marwadi shop
marwadi shop
author img

By

Published : Dec 14, 2019, 4:32 PM IST

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் தமிழ் நேசன் இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”தமிழ் பேசும் வணிகர்களின் நலன்களுக்கு எதிராக, தமிழர் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் நடத்தும் மார்வாடிகளுக்குச் சொந்தமான கடைகளை மூடி, பூட்டுப் போடும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

தமிழ்நாட்டில் சென்னை, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பெரும் நகரங்களில் வணிக நிறுவனங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.

அந்த புதிய வணிக வளாகங்களில் தமிழர்களுக்கு கடைகள் நடத்த இடம் ஒதுக்கப்படவில்லை. தமிழர்கள் வணிகம் செய்வதற்கு இடையூறாக மார்வாடிகள், பல்வேறு வகையிலான வணிக நிறுவனங்களையும், கடைகளையும் நடத்தி வருகின்றனர் .

வட இந்தியாவிலிருந்து வரும் மார்வாடிகள் தள்ளு வண்டி, சாலை ஓரங்களில் விதவிதமான கடைகளை அமைத்து வணிகம் செய்து வருகிறார்கள். அவர்களை அரசு அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் தமிழ்நேசன்

இதுபோன்ற பாரபட்சமான முறையை தமிழ் தேசியக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 4ஆம் தேதி திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள, மார்வாடிகளுக்குச் சொந்தமான கடைகளை இழுத்து மூடி, பூட்டுப் போடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து மார்வாடிகளை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக களமிறங்கும் வணிகர்கள் சங்கம்

Intro:தமிழகத்தில் உள்ள மார்வாடி கடைகளை இழுத்து மூடி பூட்டுப் போடும் போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தமிழ் நேசன் தெரிவித்துள்ளார்.

Body:தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் தமிழ்நேசன் இன்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறுகையில், தமிழ்பேசும் வணிகர்களின் நலன்களுக்கு எதிராக தமிழர் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் நடத்தும் மார்வாடிகளுக்குச் சொந்தமான கடைகளை இழுத்து மூடி பூட்டுப் போடும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்," தமிழகத்தில் சென்னை, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் வணிக நிறுவனங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது.

அந்த புதிய வணிக வளாகங்களில் தமிழர்களுக்கு கடைகள் நடத்த இடம் ஒதுக்கப்படவில்லை . மேலும் தமிழர்கள் வணிகம் செய்வதற்கு இடையூறாக மார்வாடிகள் பல்வேறு வகையிலான வணிக நிறுவனங்களையும் கடைகளையும் நடத்தி வருகின்றனர் .

அதேபோல சாலையோரங்களிலும் தள்ளுவண்டிகளில் கடைகள் நடத்தும் தமிழர்களுக்கு அனுமதி மறுத்து அரசு அதிகாரிகள் அபராதம் விதித்து வரி செலுத்த கட்டாயப்படுத்தி நடவடிக்கை எடுத்து தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறார்கள்.

ஆனால் வட இந்தியாவிலிருந்து வரும் மார்வாடிகள் தள்ளு வண்டி மற்றும் சாலை ஓரங்களில் விதவிதமான கடைகளை அமைத்து வணிகம் செய்து வருகிறார்கள் . அவர்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்ற பாரபட்சமான முறையை தமிழ் தேசியக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ் வணிகர்களின் நலன்களுக்காக தொடர்ந்து தமிழ் தேசியக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி திருச்சி மலைக் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மார்வாடி களுக்குச் சொந்தமான கடைகளை இழுத்து மூடி பூட்டு போடும் போராட்டம் நடத்த உள்ளோம்.

எனவே தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து மார்வாடி களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கட்சி கோரிக்கை விடுக்கிறது " என்று கூறினார்.

Conclusion:திருச்சியில் நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் தமிழ்நேசன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.