ETV Bharat / state

கடன் தொல்லையால் விஷம் அருந்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு - தற்கொலை

சேலம்: கடன் தொல்லை காரணமாக சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

chennai family suicide
author img

By

Published : Apr 11, 2019, 2:17 PM IST

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா மகள் ஆர்த்தி மற்றும் ஆஷிகா ஆகியோருடன் நேற்று மாலை அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது விஷம் குடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் இருந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆர்த்தி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் அழகாபுரம் காவல் துறையினர் மூன்று பேரும் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

ஒரே குடும்பத்தினர் விஷம் அருந்தி தற்கொலை

Intro:சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் சென்னையை சூளைமேட்டைச் சேர்ந்த 3பேர் விஷம் அருந்தி தற்கொலை.

Body:சேலத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தற்கொலை முயற்சி 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.

சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை.

கடன் தொல்லை காரணமாக சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது மனைவி அனுராதா மகள் மற்றும் ஆஷிகா ஆகியோருடன் நேற்று மாலை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

இன்று காலை பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விடுதிப் பணியாளர்கள் கதவை திறந்து பார்த்த போது மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஆரத்தி என்பவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக் கண்டு ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சேலம் அழகாபுரம் காவல்துறையினர் 3 பேரும் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக இந்த தற்கொலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.