ETV Bharat / state

சாலையில் சென்ற வேனில் திடீரென்று தீ விபத்து - ஓட்டுநர் காயம்! - salem highway van fire accident

சேலம்: தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன், திடீரென்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

fire
fire
author img

By

Published : Feb 21, 2020, 3:16 PM IST

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சன்னியாசிகுண்டு பகுதியில் வேனில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். அதில், ஓட்டுநர் மகேஷுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதுமாக எரிந்து நாசமாகியது.

சாலையில் சென்ற வேனில் திடீரென்று தீ விபத்து

மேலும், தீ விபத்திற்கான காரணம் மின் கசிவால் இருக்கலாம் என தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.