சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஒன்பது வனச்சரகங்களில், பறவைகள், பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. வன அலுவலர்கள், தன்னார்வலர்கள் என, 150 பேர் ஈடுபட்டுள்ளனர். ஏற்காடு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில், 16 குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது வரை சேலம் மாவட்டத்தில் காமன் செய்லர், டோனி கேஸ்டர், காடின் க்ரோ, கிரேட் ஆரஞ்ச் உள்ளிட்ட 30 வகையான பட்டாம்பூச்சி இனங்கள், பல்வேறு வகையான குருவி, மரங்கொத்தி, காடை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக, கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புப் பணியின் புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பினபடி, சேலம் வனச்சரகங்களில் 276 பறவையினங்கள், 76-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிட்த்தக்கது.
இதையும் படிங்க: வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி தீவிரம்