தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 20) சேலம் உருக்காலை வளாகத்தில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.
இதையடுத்து, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணிநேர அவசர மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கரோனா தடுப்பூசிகள் அளிப்பது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டார்.
அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான மருத்துவ வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.