ETV Bharat / state

திமுகவுக்கு வாக்களித்ததால் முதலமைச்சரின் மாவட்டத்தில் குடிநீர் கட்! கொதிக்கும் எம்.பி. - மாவட்ட நிர்வாகம்

சேலம்: திமுகவிற்கு வாக்களித்ததால் கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை மாவட்ட நிர்வாகம் முடக்கிவைத்து உள்ளதாக சேலம் திமுக மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார்.

File pic
author img

By

Published : May 27, 2019, 2:06 PM IST

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.ஆர். பார்த்திபன் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வீதி வீதியாக நடந்துசென்று நன்றி தெரிவித்தார். அப்போது அவர் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேறிஞர் அண்ணா சிலைக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எஸ்.ஆர்.பார்த்திபன் சந்திப்பு

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாள் முதல் இன்று வரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகம் முடக்கிவைத்துள்ளது. குறிப்பாக திமுகவிற்கு வாக்களித்த பல பகுதியில் குடிநீர் விநியோகத்தை வேண்டுமென்ற நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னையை சரி செய்திட வேண்டும். இல்லையென்றால் திமுகவின் தலைமையின் அனுமதி பெற்று மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.