ETV Bharat / state

அம்மன் கோயில் - காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு; ஆடிப்பெருக்கை கொண்டாடி தீர்த்த சேலம் மக்கள்! - சேலம் மாவட்ட செய்தி

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்டப் பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் காவிரி ஆற்றில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து பொதுமக்கள் ஆடிப் பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 3, 2023, 7:18 PM IST

ஆடிப் பெருக்கை கொண்டாடி தீர்த்த சேலம் மக்கள்

சேலம்: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும், அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதத்தின் 18ஆம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக பழங்காலம் முதல் கொண்டாடி வருகின்றனர். மேலும் மகாபாரதப்போர் ஆடி ஒன்று முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெற்றது என்பதை நினைவுகூரும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது. பின்னர் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. முன்னதாக கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து கோட்டை பெருமாள் கோயிலுக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோட்டை அழகிரிநாதர் கோயிலில் மாரியம்மனுக்கு புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள், வளையல் உள்ளிட்டப் பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது.

சேலம் மாமாங்கம் ஊத்துக்கிணற்றில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி செயற்கை நீருற்று ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த பக்தர்கள் கோயில் சிலைகள், ஆயுதங்களை எடுத்து வந்து நீருற்றில் சுத்தம் செய்தனர். பின்னர் சிலைகளுக்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.

ராஜ கணபதி கோயில், சுகவனேசுவரர் கோயில், செவ்வாய்பேட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன், செரி சாலையில் உள்ள எல்லை பிடாரி அம்மன் கோயில், சித்தர் கோயில், ஊத்துமலை, குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.

அய்யந்திருமாளிகை பூட்டு முனியப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்புப் பூஜை நடைபெற்றது. அதே போல மேட்டூர் அணை பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயிலில் இன்று அதிகாலை முதலே காவிரி ஆற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

மேட்டூர் அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றின் ஓரத்திலும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து, பூ பழங்கள் வெற்றிலை உள்ளிட்ட மங்களப் பொருட்களை வைத்து காவிரித் தாயை வழிபட்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலத்திலிருந்து கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை மற்றும் சேலத்தில் இருந்து மேட்டூர் , சேலம் - ஈரோடு , சேலம் - கொடுமுடி உள்ளிட்டப் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதையும் படிங்க: செப்டம்பருக்குள் சேலத்தில் விமான சேவை - எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.