சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் மண்டலம் வாரியாக அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக சேலம் காவேரி மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு மாநகராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமை மாநகராட்சி ஆணையர் சதீஷ் தொடங்கிவைத்தார்.
முகாமில் பணியாளர்களுக்கு இதய நோய், இ.சி.ஜி, ரத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கால்நடைகளுக்கான இலவச மருத்துவ சேவை எண் '1962' - கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு!