ETV Bharat / state

"பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்! - திமுக

Pension Scheme Issue: பிற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Allegation against TN government in the pension scheme
ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 5:36 PM IST

சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் பணியாளர் சந்திப்பு இயக்கம் மற்றும் சென்னை பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (நவ. 26) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்து வருகின்றனர். மேலும், தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆனால் மற்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு அதற்கான ஒரு வார்த்தையைக் கூட இதுவரை அறிவிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த இந்த வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.

மேலும் நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்கக் கூடாது என்று சட்டம் இருந்தும், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயம் விற்க வேண்டும் என்று நியாய விலைக் கடை பணியாளர்களை அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு தினம்; உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

உடனடியாக இவ்வாறு நிர்பந்திக்கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அதிகாரிகளின் நிர்பந்தத்தால் மூன்று ரேஷன் கடை ஊழியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கு தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் வரும் டிசம்பர் 22ஆம் தேதி, பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று லட்சம் பேர் பங்கேற்கும் கோரிக்கை பேரணியானது நடைபெற உள்ளது.

அதன் நிறைவாக தமிழக முதலமைச்சரை சந்திக்கச் செல்வோம். அப்பொழுது அவர் எங்களை சந்திக்க மறுத்தால், எங்களுடைய கோரிக்கை மனுவை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியில் வைத்து விடுவோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "காமராசர் பல்கலை நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.