ETV Bharat / state

கலெக்டர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் குடும்பத்தினர் மண்டியிட்டு போராட்டம் - Salem

1969ஆம் ஆண்டு போரில் மறைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு அரசு வழங்கிய நிலத்திற்கு இன்னும் பட்டா வழங்கப்படாத நிலையில் அரசுக்கு நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இதனால் ராணுவ வீரர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் குடும்பத்தினர் மண்டியிட்டு போராட்டம்

author img

By

Published : Dec 19, 2022, 9:38 PM IST

சேலம்: ஓமலூர் வட்டம், சாமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், சித்தன். இவர் கடந்த 1965ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் உடல் சிதறி வீர மரணம் அடைந்தார்.

இதற்காக கருணை அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 25.9.1969 அப்போதைய கலெக்டர் உத்தரவுப்படி, ஓமலூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் 2 ஏக்கர் 92 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. 51ஆண்டுகள் ஆகியும் அரசு அந்த நிலத்திற்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்த நிலையில் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்று கூறி, அந்த நிலத்தை மீண்டும் அரசுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் வேதனை அடைந்த அந்த குடும்பத்தினர், அரசு வழங்கிய இரண்டு ஏக்கர் 92 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கலெக்டர் அலுவலகம் முன்பு நுழைவாயிலில் மண்டியிட்டு கண்ணீர் மல்கப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், அவர்களை அழைத்துச் சென்று ஆட்சியரிடம் மனு வழங்க அனுமதித்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வெளியான அதிர்ச்சி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.