சேலம்: கடந்த 2004ஆம் ஆண்டு வீரப்பன் தர்மபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து வீரப்பனின் உடல் சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் காவிரிக் கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வீரப்பனுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதிக்க வேண்டும்
அதன்படி இன்று (அக்.18) வீரப்பனின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மூலக்காட்டுக்கு வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட அரசு அனுமதி அளிக்க வேண்டும். கலைஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு நெருக்கடிகளை சமாளித்தாரோ, அதே போல எனக்கும் நெருக்கடிகள் உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?