ETV Bharat / state

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது! - Omalur Police Station

Teacher arrested in POCSO: சேலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Omalur Police Station
Omalur Police Station
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:15 AM IST

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், சுமார் 50 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பள்ளியில் படிக்கும் 3ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் 3ஆம் தேதி மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது அம்மாவிடம் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்ததில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியரை கைது செய்த போலீசார், அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த பகுதியில் இரண்டாவது முறையாக ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. சிகிச்சை பெற்ற நோயாளி திடீர் உயிரிழப்பு! உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.