சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மணியனூர், சிவசக்தி நகர், அன்னதானப்பட்டி, காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் ஐந்து கோவில்களில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வேலுசாமி, செல்லப்பா, தனுஷ், அருள்குமரன், கதிரேசன், நந்தகுமார், விமல் குமார் ஆகியோரை இரண்டு நாள்களில் மாநகர காவல் துறையினர் அதிரடியாக கைதுசெய்து அவர்களிடமிருந்து பணம், பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை ஆணையர் செந்தில், மாநகரத்தில் உள்ள ஐந்து கோவில்களில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சாமி, தாலி, உண்டியல் பணம் போன்றவற்றை ஒரு கும்பல் திருடி வந்தது.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளோம். மேலும் வட மாநிலங்களிலிருந்து ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க... கை அறுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலையை விற்க முயன்ற இருவர் கைது!