கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
இதனையடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அரசு சில நிபந்தனைகள் அளித்து இயங்க அனுமதி அளித்திருந்தது.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை செய்வதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த அலுவலர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாத பேக்கரி கடைகளை மூடி சீல் வைத்தனர். மேலும் கடைகளிலிருந்து தேநீர் தூள் பாக்கெட்டுகள் காபி பாக்கெட்டுகள் பால் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களிடம் மீண்டும் இதுபோல நடக்கும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை காவல் துறை மூலம் எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இதேபோல் குரங்கு சாவடி பகுதியிலும் தடையை மீறி இயங்கிவந்த பேக்கரிகள், தேநீர் கடைகளையும் அலுவலர்கள் மூடினர்.
இதையும் படிங்க... சமூக விலகலைக் கடைப்பிடிக்காத இறைச்சி கடைகள் மூடல்!