ETV Bharat / state

அழிந்துவரும் கிராமியக் கலைகளை மீட்டெடுத்த ’சேலம் சங்கமம்’

சேலம்: தமிழர்களின் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு கிராமிய கலைஞர்கள் கலந்துகொண்ட ’சேலம் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

salem
salem
author img

By

Published : Jan 19, 2020, 10:42 AM IST

தமிழர்களின் அழிந்துவரும் கலைகளை மீட்டெடுக்கும் விதமாகவும், அக்கலைகளை நம்பியுள்ள கலைஞர்களின் வாழ்விற்கு உதவுகின்ற வகையிலும் சேலத்தில் அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் ஏற்பாட்டில், ’சேலம் சங்கமம்’ என்ற கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன், தென் சென்னை மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பெரிய மேளம் போன்ற பல்வேறு கலைநிகழ்சிகள் நடைபெற்றன. சேலத்தில் உள்ள பல்வேறு கலைஞர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பெரிய மேளம் என்ற நிகழ்ச்சியில் மேளம் முழங்கிகொண்டே கலைஞர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. கிராமப் பகுதியில் மட்டுமே நடத்தக்கூடிய பொய்க்கால் குதிரை கலைஞர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய ’சேலம் சங்கமம்’ நிகழ்ச்சி

தமிழர்களின் பல்வேறு கலைகள் அழிந்துவந்த நிலையில் அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ’சென்னை சங்கமம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் தமிழர்களின் கலையை மீட்டெடுத்த கவிஞரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

சேலம் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதுகளை தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், ”தமிழர்களின் பெருமைகளையும் அவர்களின் சாதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூற வேண்டியது, நமது ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

இதையும் படிங்க: பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல்

Intro:தமிழர்களின் அழிந்து வரும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சேலம் சங்கமம் நிகழ்ச்சி பறையாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சியை எராளமானனோர் கண்டு ரசித்தனர்...

 Body:
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முறியடிக்க இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்று மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுருத்தல். கவிஞர் கனிமொழி நடத்திய சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலமாக அழிந்து போன கலைகளுக்கு புத்துயிர் கிடைத்ததாக கலைஞர்கள் பெருமிதம்..

 தமிழர்களின் பல்வேறு கலைகள் நாகரீக வளர்ச்சியின் காரணமாக அழிந்து கொண்டு வருகிறது. இதனை மீட்டு எடுக்க வேண்டும் என்ற நோக்கிலும், கலைகளை நம்பி உள்ள கலைஞர்களின் வாழ்விற்கு உதவுகின்ற வகையிலும் கடந்த திமுக ஆட்சியின் போது, கவிஞர் கனிமொழி முயற்சியினால் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதன் மூலமாக நலிந்து வரும் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது.

 இதன் தொடர்சியாக அழிந்து வரும் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஏற்பாட்டில், சேலம் சங்கமம் என்ற கிராமிய கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பரத நாட்டியத்துடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரை மற்றும் பெரிய மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றது. சேலத்தில் உள்ள பல்வேறு கலைஞர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலைஞர்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்டுத்தினர். குறிப்பாக பெரிய மேளம் என்ற நிகழ்ச்சியில் மேளம் முழங்கி கொண்டே கலைஞர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தன. மேலும் கிராம பகுதியில் மட்டுமே நடத்த கூடிய பொய் கால் குதிரை கலைஞர்களின் நடன நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.

 கிராம பகுதியில் கூட மறந்து போன பொய் கால் குதிரை என்னும் கலையானது அழிந்து வரும் கலையாக உள்ளந நிலையில் நகர பகுதியில் இந்த கலையை வெளிப்படுத்தும் வகையில் தங்களுக்கு வாய்ப்பு அளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கலைஞர்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் இது போன்று தமிழர்களின் பல்வேறு கலைகள் அழிந்து வந்த நிலையில் அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலமாக தமிழகம் முழுவதும் தமிழர்களின் கலையை மீட்டும் மீட்டு எடுத்த கவிஞர் கனிமொழிக்கு கலைஞர்கள் நன்றி தெரிவித்ததோடு, சென்னை சங்கமம் நிகழ்சசிக்கு பின்னரே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வருவதாகவும் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.

 இதனிடையே சேலம் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கிய தென் சென்னை நாடளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும் போது, தமிழர்களின் அடையாளம் என்பது தற்போது அழிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக தமிழர்களின் முக்கிய் திருவிழாவான பொங்கல் திருவிழாவிற்கு விடுமுறை கட்டயாம் இல்லை என்று மத்திய அரசு கூறி இருப்பதை சுட்டிகாட்டிய அவர், இது போன்று தமிழர்களின் ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க நினைப்பதை முறியடிக்க இது போன்ற கலை நிகழ்ச்சிகள் அவசியாமாகிறது என்றும் தமிழர்களின் பெருமைகளையும் அவர்களின் சாதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை என்று பேசினார்.மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்து இலக்கிய வடிவம் கொண்ட கிழடி போன்ற நமது வரலாற்றை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை என்றால் நம்மை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் நடந்து விடும் என்றும் அதனை ஒரு போதும் விட கூடாது என்று அவர் பேசினார்.

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.