தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்களின் மண்டல ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற17ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், "பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் வருகிற 17ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளோம்.
இந்த போராட்டத்தில் டிஎன்சிஎஸ்க்கு இணையான ஊதியம், ஓய்வூதியம், பணிவரன்முறை, நியாய விலைக்கடை பொருட்களை பொட்டலமாக வழங்குதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப்படும்.
நியாய விலைக்கடை பணியாளர்களின் குறைகளை கலைய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்''என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: மலை மாடுகள் மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்குவதில் தாமதம் - விவசாயிகள் போராட்டம்