சித்திரை துவங்கும் முன்னரே தமிழகத்தில் வெயில் சதம் அடித்தது மட்டுமல்லாமல், வெப்பம் மக்களை வாட்டி வருகிறது. சேலத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று மாலை திடீரென்று மழை பெய்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செவ்வாய்பேட்டை பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. திடீரென்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.