தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளியன்று (நவம்பர் ஒன்றாம் தேதி) சேலம் மாவட்டம் கோரிமேட்டில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழி காட்டு மையமும் இணைந்து இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. எனவே பணியாளர்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் புதிய பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பல்வேறு தகுதியுடைய நபர்களை ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் காலவிரயம் இல்லாமல் பணியாட்களை தேர்வுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கௌன்டன்ட், கணினி ஆபரேட்டர், டெக்ஸ்டைல் சூப்பர்வைசர், மார்க்கெட்டிங் , டைபிஸ்ட் , ஐடிஐ ஹெல்பர், மெஷின் ஆபரேட்டர், டெய்லர் போன்ற பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வும் நடைபெறகிறது.
மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0427 - 2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலை வாங்கி தருவதாக பண மோசடி: ஒருவர் கைது