ETV Bharat / state

குடும்பத் தகராறு - செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி பெண் போராட்டம்! - salem woman cell phone tower protest

சேலம்: போடிநாயக்கன்பட்டி பகுதியில் குடும்பப் பிரச்னை காரணமாக பெண் ஒருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் போராட்டம்
author img

By

Published : Nov 8, 2019, 11:02 PM IST

சேலம் போடிநாயக்கன்பட்டி சோலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர், அலமேலு தம்பதியினர். அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அலமேலு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நூறு அடி உயர செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவம் இடம் விரைந்து வந்த சூரமங்கலம் காவல் துறையினர், சுமார் இரண்டு மணி நேரமாக அலமேலுவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சமாதனம் ஏற்பட்டதால் அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கயிறு கட்டி கீழே இறக்கினர்.

செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி பெண் போராட்டம்!

அதைத் தொடர்ந்து அப்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் பெண் ஒருவர் செல்ஃபோன் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு ஒன்று திரண்ட ஊர் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் திணறினர்.

மேலும் படிக்க: வீட்டைச்சூறையாடிய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் புகார்!

Intro:சேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியில் பெண் ஒருவர் 100 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Body:சேலம் போடிநாயக்கன்பட்டி சோலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், அலமேலு தம்பதியினர், இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு 100 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தகவல் அறிந்து விரைந்து வந்த சூரமங்கலம் காவல்துறையினர் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பத்திரமாக கயிறு கட்டி இறக்கினர்.
பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இப்பகுதியில் பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பகுதி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.