ETV Bharat / state

காரில் சிக்கிய 105 லிட்டர் கள்ளச்சாராயம்: ஒருவர் கைது - salem vazhapadi liquor seized

சேலம்: வாழப்பாடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 105 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

-liquor
author img

By

Published : Nov 3, 2019, 8:04 AM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வில்வனூர் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் மூன்று பெரிய கேன்களில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஓட்டுநர் காமராஜரிடம் விசாரித்தபோது, விழுப்புரம் மாவட்டம் சேத்தூரிலிருந்து கள்ளச் சாராயத்தை விற்பனைச் செய்வதற்காக வாங்கி வந்ததாகவும் அதில் அதிகளவு போதை வருவதற்காக ஊமத்தங்காயின் சாற்றினைக் கலந்துள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

105 லிட்டர் கள்ளச்சாராயத்துடன் சிக்கிய கார்

மேலும் குற்றச் செய்திகள்:

நாகையில் 900 லிட்டர் சாராயம் பறிமுதல் - கடத்திவந்தவர் தப்பியோட்டம்!

'ரூ.10லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்'

Intro:
வாழப்பாடி அருகே
105 லிட்டர் விஷச் சாராயம் கடத்திய நபர் கைது Body:

சேலம் மாவட்டம் வேலூர் அடுத்த எடப்பட்டி வில்வனூர் சோதனைச்சாவடியில் இன்று வாகன தணிக்கையில் போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் உள்ளிட்ட காவல் அதிகாரிகளும், சேலம் மாவட்ட வனவர் தங்கராசு மற்றும் வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே சென்ற கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். காரில் என்ன இருக்கிறது என்று கார் ஓட்டுனர் காமராஜரிடம் வனத்துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரித்தனர் வாகனத்தில் எதுவும் இல்லை என்று ஓட்டுநர் காமராஜ் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார் இதனையடுத்து வாகனத்தை முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டனர் .

அப்போது அந்த வாகனத்தில் மூன்று பெரிய கேன்களில் விஷச் சாராயம் எடுத்து வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .

இதனையடுத்து எங்கிருந்து இதை கொண்டு வருகிறீர்கள் என்று ஓட்டுநர் காமராஜரிடம் விசாரித்தபோது அவர் விழுப்புரம் மாவட்டம் சேர்த்து ஊரிலிருந்து கள்ளச் சாராயத்தை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததாகவும் அதில் அதிக அளவு போதை வருவதற்காக ஊமத்தங்காயின் சாற்றினை கலந்து உள்ளதாகவும் தகவல் தெரிவித்து வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.

இதனையடுத்து விசாரணைக்காக காமராஜர் ஏத்தாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
பட்டப்பகலில் கார் மூலம் விஷ சாராயம் கள்ளத்தனமாக கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.