ETV Bharat / state

சேலத்தில் வேட்புமனு தாக்கலுக்கு காலி குடங்களுடன் வந்த சுயேச்சை!

author img

By

Published : Dec 14, 2019, 5:27 PM IST

சேலம்: ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

local body election
காலி குடங்களுடன் ஊர்வலம் வந்த சுயேச்சை

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. வருகின்ற 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், இன்று சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, மாநிலம் முழுவதும் இன்று வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இதனால், காலை முதலே அதிமுக வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர். நேற்றுவரை வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகங்கள் இன்று பரபரப்பாக காணப்பட்டன. இந்நிலையில், சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட சுயேச்சை வேட்பாளர் வீரக்குமார், காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

காலி குடங்களுடன் ஊர்வலம் வந்த சுயேச்சை

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," சேலத்தாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. நான் ஊராட்சி ஒன்றிய தலைவரானதும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதோடு தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக உருவாக்க பாடுபடுவேன்" என்றார்.

இதையும் படிங்க: லோக் அதாலத் மூலம்11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு!

Intro:சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வீரக்குமார் காலி குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்....Body:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் வேட்புமனுத்தாக்கல் கடந்த 9ஆம் தேதி துவங்கியது. 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் சேலத்தில் நேற்றுவரை வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சியினர் யாரும் ஆர்வம் காட்டவில்லை இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே மீதமிருந்த நிலையில் சனிக்கிழமையான இன்று வேட்பு மனுக்கள் பெறப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தமிழகம் முழுவதும் இன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலும் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலே அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் நேற்றுவரை வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகங்கள் இன்று பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட சுயேட்சை வேட்பாளர் வீரக்குமார் காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலத்தாம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் தான் ஊராட்சி ஒன்றிய தலைவரானதும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதோடு தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக சேலத்தாம்பட்டி ஊராட்சியை உருவாக்க பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.