சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, மூக்கனேரியில் உள்ள ஏரி இரண்டு வருடத்திற்குப் பிறகு நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரி நிரம்பியதால் திரளான பொதுமக்கள் தினமும் ஏரிக்கு வந்து பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
ஏரியில் அதிக தண்ணீர் உள்ளதால் சில நாள்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது தினமும் ஏரியில் அதிகாலை நேரத்தில் மீன்வலையைப் பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு ஏரியில் விற்கப்படுகிறது.
இதில் கட்லா, ரோகு போன்ற மீன்கள் அதிகமாக வலையில் பிடிபடுவதால் இந்த ரக மீன்களை பொதுமக்கள் உயிருடன் விலைக்கு வாங்கியும் செல்கின்றனர்.
இது குறித்து மீன் வியாபாரி மதி கூறியதாவது, ’இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏரி நிரம்பியதால் பலதரப்பட்ட மீன் குஞ்சுகள் ஏரியில் வளர்க்க விட்டிருக்கிறோம். தற்போது மீன் குஞ்சுகள் வளர்ந்து மீன்கள் பிடிக்கப்பட்டுவிற்கப்படுகின்றன.
ஏரியில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தண்ணீர் இருக்கும். அதுவரை மீன் வளர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'எருது விடும் விழாவுக்கு கடும் நிபந்தனைகள்' - காளை பராமரிப்பாளர்கள் ஆவேசம்!