கடந்த 9ஆம் தேதி முதல் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 கோட்டங்களிலும், சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள் என 2 ஆயிரத்து 840 களப்பணியாளர்கள் தீவிர தொற்று நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அதன் அடிப்படையில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் , பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள், மருத்துவமனைகள் என பெரும்பான்மையான கட்டடங்களிலும் தூய்மையைப் பராமரிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து 14 லட்சத்து 82 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தரப்பினரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து சுகாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்க:
தூய்மையில் தேசிய அளவில் சிறந்த மாநிலம் தமிழகம் - பிரதமர் விருது