கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதையடுத்து தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதியளித்தது.
அதன்படி சென்னை - சேலம் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் போதிய பயணிகள் இல்லாததால் கடந்த இரண்டு நாள்களாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து இன்று மீண்டும் போதிய பயணிகளுடன் சென்னையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்ட முதல் விமானம் ட்ரூஜெட் 8.20 மணிக்கு சேலம் வந்தடைந்தது.
அதையடுத்து சேலத்திலிருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்ட விமானம் சென்னைக்கு 9.50 மணிக்கு சென்றடைந்தது. பின்னர் சென்னையிலிருந்து மற்றொரு விமானம் 9.50 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். கடைசி விமானம் சேலத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு , நண்பகல் 12.50 மணிக்கு சென்னை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை - தூத்துக்குடி விமான சேவை தொடக்கம்; ஆட்சியர் ஆய்வு