சேலம்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களுக்குப் பரிசுகள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டம், கந்தம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அறிவுடைநம்பி தலைமையிலான குழுவினர் இன்று (பிப்.8) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
அப்போது பனங்காடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் வாகனத்தை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், வெள்ளி கொலுசுகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கடம்பூர் பேரூராட்சி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்