சேலம் மாநகரட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோட்டைப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை இன்று மாநகராட்சி ஆணையார் சதீஷ் பார்வையிட்டார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்," குளிர்சாதன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சமுதாயக்கூடப் பணி வருகின்ற மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், வடகிழக்குப்பருவ மழை முடிந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ள தார்ச்சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் குண்டும் குழியுமான தார்ச்சாலைகள் புனணரமைப்பு செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ‘ஆணவத்தை அன்பில் எரி’ - வைரலாகும் ஆதவன் நா. முத்துக்குமார் எழுதிய கவிதை