ETV Bharat / state

1500 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் - ரோகிணி அறிவிப்பு! - 1500 official

சேலம்: சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 1500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ரோகிணி
author img

By

Published : May 20, 2019, 5:13 PM IST

நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சியினரின் முகவர்கள், வேட்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோருடன் சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றின் முடிவில் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படும். மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரக்கூடாது.

1500 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் - ரோகிணி

வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோ மற்றும் சிசிடிவியில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஆறு வாக்குச்சாவடி மையங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டு குலுக்கல் முறையில் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் காவலர்கள் உட்பட அரசு ஊழியர்கள் என 1500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்" என்றார்.

Intro:நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசியல் கட்சியினரின் முகவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ரோகிணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Body:சேலம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றின் முடிவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் .
மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரக்கூடாது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோ மட்டும் சிசிடிவியில் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுபடி vvpat இயந்திரத்தில் பதிவான ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் ஆறு வாக்குச்சாவடி மையங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டு குலுக்கல் முறையில் எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் காவலர்கள் உட்பட அரசு ஊழியர்கள் என 1500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் ரோகினி பேட்டி.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.