ETV Bharat / state

உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சேலத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!

சேலம்: உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சேலத்தில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படவிருக்கிற தூய்மைப்பணிகள், சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்.

salem-collector-inaugurated-the-world-tourism-day-festival
author img

By

Published : Sep 17, 2019, 5:30 PM IST

உலகச் சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் சேலத்தில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரையிலான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்த ஆட்சியர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன், "உலக சுற்றுலா தினத்தையொட்டி நாளை முதல் 24ஆம் தேதிவரை மேட்டூர் அணை, ஏற்காடு, சித்தர் கோயில், தாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாத் துறை சார்பில் தூய்மைப் பணிகள் மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

மேலும், வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், சுற்றுலாத் துறை அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர் " என்றார்.

Intro:உலக சுற்றுலா தினம் விழாவை முன்னிட்டு சேலத்தில் ஏற்காடு, மேட்டூர் அணை, சித்தர் கோயில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் தூய்மை பணிகள் மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Body:உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் சேலத்தில் இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்ட உள்ளது. இதன் துவக்கவிழா சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் பரதநாட்டிய, தேவராட்டம், மான் கும்பாட்டம் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராமன் உலக சுற்றுலா தினத்தையொட்டி நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை மேட்டூர் அணை, ஏற்காடு, சித்தர் கோவில், தாரமங்கலம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா துறை சார்பில் தூய்மை பணிகள் மற்றும் சுற்றுலா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர் வரும் 27ஆம் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் அரசுத்துறை செயலாளர்கள், சுற்றுலாத் துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேட்டி: ராமன், மாவட்ட ஆட்சியர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.