ETV Bharat / state

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - ஆட்சியர்

வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

raman
raman
author img

By

Published : Mar 23, 2021, 10:18 PM IST

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 412 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,186 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 19 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளர்கள்,

ஆத்தூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 11 வேட்பாளர்கள்,

ஏற்காடு (எஸ்.டி) சட்டப்பேரவைத் தொகுதியில் 13 வேட்பாளர்கள்,

ஓமலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 15 வேட்பாளர்கள்,

மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பாளர்கள்,

எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 28 வேட்பாளர்கள்,

சங்ககிரி தொகுதியில் 23 வேட்பாளர்கள்,

சேலம் (மேற்கு) சட்டப்பேரவைத் தொகுதியில் 28 வேட்பாளர்கள்,

சேலம் (வடக்கு) சட்டப்பேரவைத் தொகுதியில் 20 வேட்பாளர்கள்,

சேலம் (தெற்கு) சட்டப்பேரவைத் தொகுதியில் 24 வேட்பாளர்கள்,

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் என

மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அணைவரும் நூறு விழுக்காடு வாக்களிக்கும் விதமாக ஏப்ரல் 6ஆம் தேதி அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகத்தை வலுப்படுத்திட விலைமதிப்பற்ற வாக்குரிமையை கட்டாயம் செலுத்திட வேண்டும். சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்ததலை சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" என குறிப்பிடபட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.