ETV Bharat / state

விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு - காவல் துறைக்கு பாராட்டு

சேலம்: விற்கப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்ட காவல் துறையினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

salem child recovery
author img

By

Published : Nov 20, 2019, 12:38 PM IST

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனாபட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவரும் உறவினரான ராஜாவும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மீனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீனா 2017ஆம் ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூர் கோயிலில் ராஜாவை திருமணம் செய்துகொண்டார்.

இதன் பின்னர் திருப்பூரில் இருவரும் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மீனாவுக்கு உடல்நிலை பாதித்திருந்ததை அறிந்த மீனாவின் பெற்றோர் திருப்பூருக்குச் சென்றனர்.

திரும்பி வரும்போது குழந்தையை நைனாபட்டிக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டனர். இங்கு வந்ததும் குழந்தையை ரூ. 3 லட்சத்திற்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மீனா தனது குழந்தை எங்கே என பெற்றோரிடம் கேட்டதற்கு குழந்தை இறந்துவிட்டது என அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மீனா-ராஜா தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை பெற்றோர் 3 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டதாக புகார் செய்தனர். அந்தப் புகாரின்மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்துவந்தனர்.

விற்கப்பட்ட குழந்தை ஒரே நாளில் மீட்பு

போலீசார் மீனாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது குழந்தையை பெற்றபோது மீனாவிற்கு உடல்நிலை மோசமாகி மனநிலை பாதிக்கப்பட்டவர்போல நடந்துகொண்டார். இதனால் குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்த குழந்தையில்லாத உறவுப் பெண் ஒருவருக்கு கொடுத்துவிட்டோம் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து திருநாவலூர் சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுக்கொண்டு செவ்வாய் இரவு சேலம் திரும்பினர். புகார் கொடுத்த ஒரே நாளில் ஆண் குழந்தையை மீட்டுவந்த ஆட்டையாம்பட்டி போலீசாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் கணிகர் பாராட்டினார்.

இதையும் படிங்க:

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Intro:கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஆண் குழந்தை மீட்பு ஒரேநாளில் துப்புத் தொடக்கிய ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு பாராட்டு.

Body:சேலம் அருகே உள்ளது ஆட்டையாம்பட்டி இங்கு உள்ள நைனாபட்டியை சேர்ந்தவர் மீனா. இவரும் உறவினரான ராஜாவும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மீனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீனா கடந்த 2017ம் ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூரில் கோவிலில் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் திருப்பூரில் இருவரும் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மீனாவுக்கு உடல்நிலை பாதித்து இருந்தது. இதை அறிந்த மீனாவின் பெற்றோர் திருப்பூர் சென்றனர்.

பின்னர் குழந்தையும் மீனாவையும் பெற்றோர் நைனாபட்டியை அழைத்து வந்துவிட்டனர். இங்கு வந்ததும் குழந்தையை உறவினர் ஒருவருக்கு கொடுத்து விட்டனர். அப்போது மீனா தனது குழந்தையை எங்கே என பெற்றோரிடம் கேட்டதற்கு குழந்தை இறந்து விட்டது என பெற்றோர் தெரிவித்ததாக தெரிகிறது. இதுபற்றி கணவன் ராஜாவிடம் மீனா தெரிவித்தார். பிறகு ராஜா திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் கடந்த திங்களன்று ராஜாவும், மீனாவும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தையை பெற்றோர் 3 லட்சத்திற்கு விற்று விட்டதாக புகார் செய்தனர். இதன்மீது விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தனிப்படை அமைத்தார். இதில் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் இடம் பெற்று விசாரித்தனர். அப்போது தனிப்படை போலீசார் மீனாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தபோது குழந்தையை பெற்றபோது மீனாவிற்கு உடல்நிலை மோசமாகி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார்.

இதனால் குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஐ சேர்ந்த குழந்தையில்லாத உறவுப் பெண் ஒருவருக்கு மீனாவின் ஆண் குழந்தையைக் கொடுத்தது துப்பு துலங்கியது. இதை அறிந்த தனிப்படை போலீசார் திருநாவலூர் சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் செவ்வாய் இரவு குழந்தையுடன் தனிப்படை போலீசார் சேலம் திரும்பினர். இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது.

குழந்தை பிறந்தவுடன் மீனாவிற்கு மனநிலை பாதித்தவர் போல் இருந்தார். இதனால் ஆண் குழந்தையை என்ன செய்வது என தெரியாமல் மீனாவின் பெற்றோர் குழந்தை இல்லாத உறவுப் பெண் ஒருவருக்கு கொடுத்து இருப்பது தெரியவந்தது. பின்னர் திருநாவலூர் சென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது நடந்த விவரத்தை அவர் தெரிவித்தார். பிறகு அந்தப் பெண்ணிடம் இருந்து ஆண் குழந்தையை மீட்டு வந்தோம். இந்தக் குழந்தை மீனாவிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகார் கொடுத்த ஒரே நாளில் துப்பு துலக்கி ஆண்குழந்தையை மீட்டு வந்த ஆட்டையாம்பட்டி போலீசாரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் கணிகர் பாராட்டினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.