ETV Bharat / state

‘புரோட்டா-பியூட்டி பார்லர் கடைக்காரர்களை மிரட்டுவதுதான் திமுகவின் வேலை’ - ஓபிஎஸ்

சேலம்: மத்திய ஆட்சியில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சேலம் மக்களவை தொகுதியில் ஓபிஸ் பிரச்சாரம்
author img

By

Published : Mar 30, 2019, 9:38 AM IST

Updated : Mar 30, 2019, 10:02 AM IST

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாபட்டி கேட், அக்ரஹாரம், வின்சென்ட் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நல்லவர்களை கொண்ட தர்மத்தின் கூட்டணியாக அதிமுக கூட்டணி அமைந்துள்ளது.

மத்திய ஆட்சியில் பத்தாண்டு காலம் அங்கம் வகித்த திமுக, தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. உருப்படி இல்லாத சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து 40 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை கடலில் போட்டு வீணடித்தார்கள். ஆனால், காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான்.

திமுக கடந்த ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியில் வன்கொடுமை என அனைத்து சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததால் கடந்த தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணித்தனர். மேலும், புரோட்டா கடைக்காரர்களை மிரட்டுவது, பியூட்டி பார்லரில் பெண்களை எட்டி உதைப்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடுவதுதான் திமுகவின் நோக்கமாக உள்ளது. முன்பெல்லாம் உணவகங்களில் உண்ட பிறகுதான் பணம் கேட்பார்கள், ஆனால் திமுகவினரின் அராஜகத்திற்கு பிறகு முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டுதான் உணவு வழங்குகிறார்கள். அந்த அளவிற்கு திமுகவினர் அராஜகங்களை நடத்தியுள்ளனர் என்று கிண்டலடித்தார்.

சேலத்தில் ஓபிஎஸ் பரப்புரை

சேலம் 29.3.2019
M.kingmarshal-stringer 

மக்கள் மத்தியில் பிரபலமாக திமுக தலைவர் ஸ்டாலின்  ஏதேதோ  செய்கிறார்  அதெல்லாம் பெரிய அதிசயமா? நாம டீக்கடையையே நடத்திருக்கோம் அதனால ஸ்டாலின் பாஷா எல்லாம் நம்மகிட்ட பலிக்காது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சேலத்தில் கிண்டல்....

சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சேலம் தாதகாபட்டி கேட், அக்ரஹாரம், வின்சென்ட் பகுதிகளில்  பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நல்லவர்களை கொண்ட தர்மத்தின் கூட்டணியாக அதிமுக கூட்டணி அமைந்துள்ளது. அதேபோல கெட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். மத்திய ஆட்சியில் பத்தாண்டு காலம் பதவி வகித்த திமுக, காங்கிரஸ் தமிழகத்திற்க்கு எந்த ஒரு தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. உறுபடி இல்லாத சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து 40 ஆயிரம் கோடி மக்கள் பணத்தை கடலில் போட்டு வீணடித்தார்கள். ஆனால் காவிரி நதிநீர் பிச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான், அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போகும் என்று வீன் பரப்புரையை மேற்கொண்டு வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த பன்னீர்செல்வம், ஒன்னறை கோடி தொண்டர்கள் அடித்தளமாக கொண்ட அதிமுகவை சுனாமி வந்தாலும், பூகம்பம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது, தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் யார் காணாமல் போகிறார்கள், திமுக நிலை என்ன என்பது தெரியவரும். திமுக கடந்த ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததால் கடந்த தேர்தலில் மக்கள் திமுகவை புறக்கணித்தனர். யார் ஆட்சியில் தமிழகத்திற்கு ஜீவாதார திட்டங்களை கொண்டு வந்தனர் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். புரோட்டா கடைகாரர்களை மிரட்டுவது, பியூட்டி பார்லரில் மிரட்டுவது, பொண்களை எட்டி உதைப்பது போன்ற அராஜக போக்கில் ஈடுபடுவதுதான் திமுகவின் நோக்கமாக உள்ளது. முன்பெல்லாம் உணவகங்களில் உண்ட பிறகுதான் பணம் கேட்பார்கள் ஆனால் திமுகவினரின் அராஜகத்திற்கு பிறகு முன்கூட்டியே பணம் பெற்றுக்கொண்டுதான் உணவு வழங்கும் அளவிற்கு திமுகவினர் அராஜகப்போக்கை நடத்தியுள்ளனர் என்று கிண்டலடித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் கலரு கலரா சட்டை போடுறாரு, டிராக்டர் ஓட்டுறாரு, சைக்கிள் ஓட்டுறாரு, கரும்புத் தோட்டத்தில் சிமெண்ட் சாலை போட்டு நடந்து போகிறாரு, டீ கடையில டீ குடிக்கிறாரு இது எல்லாம் பெரிய அதிசயமா? நாம டீக்கடையையே நடத்திருக்கோம் அதனால ஸ்டாலின் பாஷா எல்லாம் நம்மகிட்ட பலிக்காது எனவும் கிண்டல் அடித்த அவர் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காட்டிய இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களித்து சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சரவணனை தமிழகத்தில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

File name
TN_SLM_03_29_ADMK_CAMPAINGN_VIS_TN10024
Last Updated : Mar 30, 2019, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.